அஞ்சனம்



          அஞ்சனம் மை தயாரிக்க


மூலிகைகள்:


1)  கீழக்காய் நெல்லிக்காய்

2) வெள்ளிச் சாரணை வேர்

3) வெண்குன்றி வேர்

4) வெண் கொழிஞ்சி வேர்

5) வேளை வேர்

6) ஆவாரம் வேர்


செய்முறை:

இந்த. ஆறு மூலிகைக்கும் முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி  செய்து, ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர வைத்து சுருக்கி எடுத்துக் கொண்டு, ஓரு தேவாங்கை பிடித்து அதன் குடலை நீங்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை  வேரைக் கல்வத்திலிட்டு அரைக்க வேண்டும்.இரண்டு ஜாமம் அரைத்த பின் பச்சைகற்பூரம்,புனுகு, கோரோசனம், குங்குமப்பூ, கதூரி வகைகக்கு ஓரு குன்றிமணி எடை போட்டு, மறுபடியும் ஓரு ஜாமம் அரைக்க வேண்டும்.ஓரு ஜாமம் என்பது இரண்டரை மணி நேரம்.இவ்விதம் அரைத்த மை பக்குவம் அடையும்.இதை யானை தந்தம் அல்லது கொம்பு இவைகளால் செய்த டப்பியில் போட்டு பத்திரம் செய்யவும்.

பூஜை மந்திரம் :




ஓம் நமோ பகவதி ஹ்ரீம் க்லீம் அஞ்சனாதேவி வாயு பத்னி அமிர்த ஸொரூபினி மமவஸம் குருகுரு ஸ்வாஹா.


இந்த மந்திரத்தை தினம் 1008 உருவு வீதம் பதினோரு தினம் செய்ய, மை உயிருண்டாகும்.

நிவேதனம் :

பால்,பழம்,வாசணை திரவியம்,பத்தி, சூடம்,தேங்காய்,புஷ்பம் முதலியவற்றை வைத்து, தூப தீபம் காட்டி வணங்கி மையை பத்திரம் செய்யவும்.

பிரயோகம்:


இந்த மையை வேண்டும் போது கொஞ்சம் எடுத்து ஓரு வெற்றிலையில் தடவி விளக்கு ஓளியில் பார்த்தால் காணாமல் போன பொருள், அது இருக்கும் இடம், எடுத்த சென்றவர் முழு உருவம் நன்றாக தெரியும்.காணாமல் போன எந்த பொருளாக இருந்தாலும் காட்டும்.அஞ்னா தேவியின் பூஜை வாரம் ஓரு முறை செய்ய வேண்டும்.பூஜை செய்ய செய்ய மையின் சக்தி அதிகரிக்கும்.


நண்றி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts