யந்திர சாபநிவர்த்தி

                    யந்திர சாபநிவர்த்தி




ஓம் சக்தி சாபம் நசி நசி ஓம் சித்தர்கள் சாபம் நசி நசி ஓம் தேவர்கள் சாபம் நசி நசி எவரிட்ட சாபமாயினும் நசி நசி ஓம் யந்திர தேவா உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க.  சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா.


என்று கூறி சிறிதளவு விபூதியை தகட்டின் மீது போட தகடு சுத்தியாகும். அதாவது சாபவிமேசனம் ஆகும்.




              எந்திர மந்திர சாப நிவர்த்தி (மற்றொரு முறை)


ஓம் எம்பிராணி, சிவப்பிராணி, எந்திரப்பிராணி சர்வ எந்திரப்பிராணி குரு குரு சானித்தியான குந குந். ஓம் சக்தியிருக்க சிவனிருக்க, சர்வ எந்திரமந்திர பிராணாயா நம

சுக்கில சாபகாரண நீபராணுய நமா ருத்திர சாபகாரண நீ பராணாய நமா


உம்படு சுவாஹா இம்மிடரி திரிச்சுட சுடு சுடு இம் முக பிறு முக போத நிக்குயாயச்சி பளும் மாயா

பஞ்சாக்கி சூரிகிடாராய தியாயா தியாயா உம் படு சுவாஹா.




                            கணபதி மந்திரம்


அரி ஓம் திரிபுர சங்கர விக்னேஸ்வர ரூபா.


டம் டம் சரணம் நின்னை நான் நம்பினேன்,


வா வா கண்பதி மகா கணபதி என் நாவிலு வாக்கிலும், வந்து நிற்க சிவா


நெடுமால் திருமுருகா நித்தம் முதலாக


கொடுமால் வினையறுக்கம் கொன்றே தடுமாறாது


எண் எழுத்து முப்பது வாயும், என் சித்தத்தே நிற்க .


உத்தமனே உம் பாதம் பணிந்தேன்.


அரி ஓம் சகல குரு பேந்தம் சமஸ்ட குருவே.


கெங்கா ஆதி குருவே ஜெகநாதன குரு


ஆத்ம சுத்தி பஞ்ச பூத தேவர்கள் காக்க


அண்ட பிண்ட சராசரமெல்லாம் என்முன் நிற்க சிவ என்று மும்முறை சொல்லி சிறிது விபூதியை விநாயகர் முன் போட வேண்டும்.


             மந்திரம் செய்யும் விதானம்


எந்திரப் பிரயோகம், அஷ்ட கர்ம மந்திர பிரயோகம் ஆகியவற்றிற்கெல்லாம் பிராண பிரதிஸ்டை என்பது முக்கியம். இதை எப்படி செய்வதென்றால் குளித்து தலை முழுகி சுத்தமாக துவைத்த ஆடைகள் அணிந்து கொண்டு பிள்ளையார் வைக்கும் இடத்தை சாணத்தால் மெழுகி கொள்ள வேண்டும். (தற்போது கிரைனட், மார்பில்ஸ் போன்றவைகள் போட்டு வீடு கட்டுவதால் சுத்தமான தண்ணீரால் துடைத்துக் கொள்ளலாம்). ஒரு எலுமிச்சம் பழம் அளவு மாட்டு சாணத்தை கையில் எடுத்துக்கொண்டு முதலில் குரு மந்திரம் 3 உரு கொடுக்க வேண்டும். பின்  சுத்தம் செய்த இடத்தில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

பிள்ளையாரை வைக்கும் போது ஓம் கணபதி நமசிவாயனே, சிவக்கொழுந்தே சீறி எழுந்திருப்பாய் நம என்று சொல்லி சாணிப்பிள்ளையாரை வைக்க வேண்டும். 

ஓம் மஹா கணபதி ஓம் என்று அருகம்புல்லைச் சாத்தி விபூதியை கொஞ்சம் எடுத்து ஓம் கணபதி நமசிவாயனே சீறி எழுந்திருப்பாய் நம வேத முதலே நமசிவாயனே. 

வினாயகனே நாராயணன் தன் மருமகனே ஆனை முகமும், அஞ்சுகாரமும், தொந்தி வயிறும், ஒத்தைக் கொம்பும், திருமார்பும், இருபாதமும் யிங்ஙனே இருக்க சுவாஹா என்று விபூதியை பிள்ளையார் சிரசிலே போட்டு ஓம் மூல விக்னேசாய நம என்று சந்தனம் சாத்தி மஹா கணபதியே நம என்று சொர்ண புஷ்பம் சாத்தி தூப தீபம் கொடுத்து பிள்ளையார் முன் வாழை இலை போட்டு அந்த இலையில் ஒரு தேங்காய் உடைத்து வைத்து ஒரு வாழைப் பழத்தை முனையை கிள்ளி வைத்து 9 வெற்றிலையை நாக்கையும் மூக்கையும் கிள்ளி வைத்து 5 பாக்கை நனைத்து எடுத்து வைக்க வேண்டும்.


பிறகு சர்க்கரை, கற்கண்டு, முனை முறியாத பச்சை அரிசியை ஒரு காசு எடை எடுத்து பாலில் நனைத்து சர்க்கரை சேர்த்து கலந்து வைத்து சிறு பருப்பும் அரிசியும் வைக்க வேண்டும்.


பாசிப்பயிறு உடைத்து பாலில் நனைத்து சர்க்கரை போட்டு கலந்து வைக்க வேண்டும். ஒரு கும்பத்தில் கால்படி பசும் பால் விட்டு அதில் மூன்று வாழைப்பழம் உரித்து போட்டு இலையின் பக்கத்தில் வைக்க வேண்டும்.


கடலை. சிறு பயிறு. காராமணி போன்றவற்றை சுண்டலாக ஆக்கி வைக்க வேண்டும். பொரி, வடை அவல், எள்உருண்டை மற்றும் கிடைக்கும் பழ வகைகள் யாவும் வைத்து தூப தீபம் கொடுத்து வெள்ளை அலரிப் பூவாவது, மல்லி பூவாவது குரு மந்திரம் 11 உரு ஜெபித்து பிள்ளையார் பெயரில் அர்ச்சனை செய்து வணங்கிக் கொண்டு சுவாமி அடியேன் நினைத்து செய்கின்ற அஸ்ட கர்ம வித்தைகள் சித்தியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஜெபம், பிராணபிரதிஸ்டை மந்திரம் 108 ஜெபித்து பிள்ளையார் பெயரில் அர்ச்சனை செய்து தூப தீபம் கொடுத்தால் பிராணபிரதிஷ்டை சித்திக்கும்.



முதல் முதலாக மாந்தீரீகம் கற்பவர்கள் மேற்கண்ட முறையில் பிரதிஸ்டை செய்து யந்திரம் எழுதும் முறையை கையாண்டு முறையாக யந்திரம் எழுதி சாபநிவர்த்தி செய்து உயிர் கொடுத்து சித்து எடுக்க வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

Abouts