அகத்தியர் அருளிய சக்தி தீட்சை
சக்தி தீட்சை மந்திரங்கள்:
செப்புவேன் சத்தியுட தீட்சைமார்க்கம் சிவசிவா ஓம் அரி யென்யோதி துப்புரவாய் நீயிருந்து குருவைப்போற்றி துருவமுடன் மண்டலமே செபித்தாயாகில் தப்புகிறே னென்றோடும் சுரதோசங்கள் சாங்கமாய் த் தன்தேகஞ் சித்தியாகும் சிற்பரத்தின் தேகமது சித்தியாச்சு சிவாயகுரு பாதமதிற் சேரலாமே.
சேரப்பா ரெண்டான தீட்சைகேளு சிந்தைமன தொன்றாக உம் அங் கென்று நேரப்பா புருவநடுக் கமலமீதில் நீயிருந்து மண்டலமே செபித்தாயாகில் வீரப்பா கொண்டதொரு மூலந்தன்னில் வேதாந்தத் தீயதுவு மெய்யிற்சாடும் காரப்பா மூலமென்ற நந்திகாணும் கண்ணுமனக் கண்ணதினால் கருத்தாய்ப்பாரே.
கருத்தான தீட்சையிலே மூன்றாந் தீட்சை
காரணமாய்ச் சொல்லுகிறேன் நசிசிம் மென்று திருத்தமுடன் மனதுறுதி யாகமைந்தா செம்மையுடன் மண்டலமெசெபித்தாயாகில் வருத்தமென்ற மரலியவன் அகன்று போவான் மகத்தான தீவினைகள் மாண்டுபோகும் நெரித்தமர்க்குள் விளங்குகின்ற தீபந்தோணும் நேரான தீபமதா லெல்லாஞ்சித்ததே.
சித்தான தீட்சையடா நாலந்தீட்சை சின்மயத்தி னருளாலே செப்பக்கேளு சுத்தான சுத்தல்ல துருவங்காணும் துருவமுடன் ரம் மென்று லம் மென்றுந்தான் பத்தான நடுமனையில் மனதைநாட்டி பக்குவமாய் மண்டலமே செபித்தாயாகில் முத்தான மூல அனல் சித்தியாகும் மூதண்ட தெரிசனையா முழுதும் பாரே.
பாரப்பா மனதுறுதி யாகநீயும் பத்தியுட னைந்தான தீட்சைதன்னை ஆரப்பா அறிவார்கள் ஓம் றீங் கென்று அருமையுடன் மண்டலந்தான் செபித்தாயாகில் நேரப்பா நின்ற தொரு பஞ்சகர்தா நிசமாக உனதிடத்தில் நிலையாய் நிற்பார் தேரப்பா மனந்தேறிபௌ பூரணத்தைப்பாரு சிவசிவா பூரணத்தால் காரணத்தைநோக்கே.
நோக்கப்பா தீட்சையிலே ஆறாந்தீட்சை நுன்மையுடன் அம்கிலி இங்கென்றெதான் தாக்கப்பா தன்னிலையில் மனதுறுதியாக தன்மையுடன் சதாகாலஞ் செபித்தாயாகில் வாக்காப்பா மங்காது சித்தியாகும் வரிசையுள்ள ஆறுதலம் வளமாய்க்காணும் நாக்கப்பா சிரோமணியை நாடிநில்லே.
நில்லப்பா நிலைதனிலே நினைவாய்நின்று நேசமுடன் ஏழான தீட்சைகேளு சல்லப்பா நினையாமல் ஓம் நம் மென்று தன்மையுடன் மண்டலமே செபித்தாயாகில் வில்லப்பா விசைபோலே வாசியேறும் வேதாந்தப் பொருள் தனிலே மேவிப்பாரு உள்ளப்பா ஓருமனதாய்ப் பார்த்தாயானால் உன்தேகம் விளக்கொளிபோ லுண்மையாமே
உண்மையுடன் தீட்சையிலே எட்டாந்தீட்சை ஓதுவது ஓம் சும் சுவ் வென்று நீ தன்மையுடன் தன்னருளைத் ததீயானம் பண்ணி சதாகாலம் உதையமதில் செபித்தாயாகில் நன்மையுள்ள திசைவாய்வு அகலாமல்தான் நடுவான பூரணத்தில் நாட்டாமாகும் தின்மையுள்ள தீவினைக ளகலத்தள்ளும் சிவசிவா பூரணத்தில் சென்றுநில்லே
நில்லாடா நிலையான ஓன்பதாந் தீட்சை நினைவாகச் செபிப்பதற்கு நிதானங்கேளு சொல்லாடா ஓன்றுமில்லை மைந்தாமைந்தா சுருதியுடன் ரம்ரங் யம்மென்றேதான் சொல்லாடா மண்டலமே செபித்தாயாகில் தேகவச்சிர காயமதாம் நோயோயில்லை தள்ளடா சுகதுக்கம் ரெண்டுங்கண்டு சற்குருவைப் போற்றிமன தறிவாய்நில்லே.
அறிவான தீட்சையடா பத்தாந்தீட்சை ஆரறிவார் தீச்சையிலே யனந்தமுண்டு குறியான தீட்சையிது பிறிங்சும்மென்று குருவான பதிநோக்கி மைந்தாநீயும் நெறியாக மண்டலமே செபித்தாயாகில் நிலையான மந்திரங்கள் சக்கரங்கள் பொறியான தேவதைகள் சகலத்துக்கும் பொருந்திநின்ற சாபமெல்லாம் போகும்பாரே.
பாரப்பா பதினோராந் தீட்சைதன்னை பக்குவமாய் சுழிமுனையில் டம்நம் மென்று நேரப்பா நின்றகுறி தவறாமல்தான் நிச்சயமாய் மண்டலமே செபித்தாயாகில் பேரப்பா அண்டபதந் தன்னிலேதான் பேசாத நாதவொலி காதில் கேட்கும் ஆரப்பா உனக்குநிகர் சொல்வேனய்யா அம்புவியில் நீயுமொரு சித்தனாமே.
சித்தனாய் போவதற்கு இன்னமொன்று செப்புகிறேன் சிவசத்தி தீட்சைதன்னை
முத்திபெற உதயமதி லங் கென்றேநில் மோனமுடன் மாலையிலே உங்கென்றேநில் பத்தியுடன் கலைதவறா துருவே செய்தால் பாலகனே உன்தேகம் வாலையாகும் புத்தியுடனந்திசத்தி நாதவிந்தை பூரணமா யுருவேத்திப் பூரணத்தைக்காரே
காரப்பா சிவசக்தி தீட்சை சசொன்னோம் கருணையுடன் செபிபப்பதற்க்கு காலஞ்சொன்னோம் நேரப்பா நிற்பதற்கு நினைவு சொன்னோம் நேரான பூரணத்தின் பதிவுஞ்சொன்னோம் பேரப்பா பெற்றதொரு ஆறாதாரம் பெருமையுள்ள நிலமதுவும் பேணிச்சசொன்னோம் சாரப்பா வாசிபூ ரணமுஞ்சொன்னோம் சதாபோத மானதொரு நிலைசொன்னோமே
சொன்னமொழி தவறாம லின்னூல்தன்னை சுத்தமுடன் தானெடுத்துப் புத்திகொண்டு விண்ணதனைத் ததானோக்கிப் பூரணத்தைநன்றாய் விபரமுடன் ஆதிததொடுத் தந்தம்பாரு புண்ணியனே ஆதிதொடுத் தந்தம் பார்த்தால் போக்குவரத் தானதொரு புதுமைகாணும் தன்னருளே தனதாகத் தானேநின்று தன்மயமாஞ் சற்குவின் தியானங்கேளே.
1.முதல் தீட்சை மந்திரம்:
ஒம் அரி
2.இரண்டாவது தீட்சை மந்திரம் :
உம் அங்
3.முன்றாவது தீட்சை மந்திரம்:
நசிசிம்
4.நான்காவது தீட்சை மந்திரம்:
ரம் லம்
5.ஐந்தாவது தீட்சை மந்திரம் :
ஓம் றீங்
6.ஆறாவது தீட்சை மந்திரம் :
அம் கிலி இங்
7.ஏழாவது தீட்சை மந்திரம் :
ஓம் நம்
8.எட்டாவது தீட்சை மந்திரம் :
ஓம் சும் சுவ்
9.ஓன்பாதாவது தீட்சை மந்திரம் :
ரம் ரங் யம்
10.பத்தாவது தீட்சைமந்திரம்:
பிறிங் சும்
11.பதின்ஓன்றாவது தீட்சை மந்திரம் :
டம் நம்
12.பனிரெண்டாவது தீட்சை மந்திரம் :
லங் உங்
தீட்சைமந்திரங்கள் சக்திவாய்தாவை குருவின் துனைகொண்டு மந்திரங்களை பயன்படுத்துங்கள்
நண்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக