அகத்தயர் அருளிய சிவ தீட்சை மந்திரம்
சிவ தீட்சை மந்திரம் சித்தான சிவதீட்சை மைந்தாகேளு சிவசிவா முதல் தீட்சை சிங் சிவ் வென்று பத்தான அகாரபதி நடுவேநின்று பாலகனே மண்டலமே செபித்தாயானால் சுத்தானா ஆங்காரந் தொலைந்தே போகும் துன்பமென்ற தீவினைகள் தூர ஓடும் வத்தாமல் பாக்கியங்கள் வளர்ந்துநிற்க்கும் மமார்க்கமுடன் ரெண்டான தீட்சைகேளே
கேளப்பா ரெண்டான தீட்சை மார்க்கம் கெம்பீர மாக அங் அம் மென் றோது நாளப்பா மண்டலமே ஓதினாக்கால் நல்வவினையுந் தீவினையும் நாடாதோடும் வாளப்பா வினைகள்ரெண்டு மடங்கித்தானால் மகத்தான மனதூ பூரணமாய்க்காணும் ஆளப்பா அந்தமன துறுதியாலே அவையடக்கம் மமுன்றான தீட்சைகேளே.
தீட்சையிலே மூன்றான தீட்சைமைந்தா ததிறமாக "அம் சிங் "கென்றுசொல்லு காட்சில்லாக் காட்சியது கண்ணில் காணும் கருணையுள்ள வாசியது களறாதய்யா பேச்சிலுன்னைப் பெரியோர்கள் புகழ்ந்துகொள்வார் பேருலகில் நீயுமொரு சித்தனாவாய் தாச்சியில்லாச் சிவயோகந் தானேதங்கும் தன்மையுட னாலான தீட்சை ஓதே.
ஓதுவது சுழிமுனையில் வாசிபூட்டி ஓதுங்காகாமல் சுடரதிலே "சிங் வங் கென்று "நீதியுடன் செபித்துவிடு மண்டலந்தானப்பா நேர்மையுடன் பொசித்தததெல்லா ருசியதாகும் வாதுகள்தான் செய்து நிற்குந் தாதுவெல்லாம் மயங்காம லறிவுபூ ரணமாய்நிற்கும் ஆதியெனுஞ் சதானந்தி கமலமீதில் அருளைப்போற்றே.
போற்றுவது அஞ்சான தீட்சைகேளு புண்ணியனே சொல்லுகிறேன் "அம் றீங் "கென்று தோற்றமுடன் மண்டலமே செபித்தாயாகில் சிவசிவா பஞ்சகர்த்தா சித்தியாகும் நாற்றிசையுங் கீர்த்திபெறக் ககருணையுண்டாம் நாதாந்த சின்மயமே நடுநின்றாடும் பார்த்திபனே பரமகயி லாசந்தோற்றும் பக்குவமாய் யயாறான தீட்சைபாரே.
பாராப்பா ஆறான தீட்சை கேளு பத்தியுடன் சொல்லுகிறேன் "நங் கிலி" யென்று நேரப்பா நின்ற நிலை தன்னில் நின்று நினைவாக மண்டலமே செபித்தாயாகில் ஆரப்பா அறிவார்க ளாறாதாரம் அப்பனே சடாதாரக் ககோர்வைதோன்றும் பேரப்பா கொண்டதொரு ஞானதீபம் பிசகாது தன்னிலையிற் பேணிப்பாரே.
பார்க்கையிலே பதிவான யேழாந்தீட்சை பத்தியுடன் "அய்யும் சிவ் " வென்று சொல்லி ஏர்க்கையுடன் செபித்துவிடு மண்டலந்தான் ஏகாந்தக் கருனைவிழி சோதிதோற்றும் மார்க்கமுள்ள மதியமுர்த மருவிபாயும் மைந்தனே அந்தமுர்தம் மவுனரசமாகும் தீர்க்கமுடன் அந்தரசங் கொண்டாயானால் சிவயோகத் ததீர்க்கமது புனிதமாமே.
ஆமப்பா தீட்சையிலே எட்டாந்தீட்சை அரகரா சொல்லுகிறோம் "உம் சவ்" வென்று நாமப்பா சொல்லுகிறோம் தினமுன்னூறு நன்மையுடன் செபித்துவிடு மண்டலந்தானப்பா தாமப்பா மண்டலமே செபித்தாயானால் தவமான அஷ்டசித்துக் ககுருதியாகும் காமப்பால் கானார்பால் கசடுநீங்கும் கயிலாச நிலமைதனைக் ககாட்டடுந்தானே.
தானெனன்ற ஓன்பதாந் தீட்சைதன்னை தன்மையுடன் சொல்லுகிறோம் "ரம் லம் " மென்று வீணென்று பாராமல் மண்டலமே செபித்தால் வேதாந்த சாரமெல்லா மெய்யிற் தோற்றும் தேனெனன்று அமுர்தரச தேகமாகும் திகம்பரமு மம்பரத்தின் தெரிசனமுமாகும் ஊனெனன்ற தேகமது சித்தியாகும் உண்மையுள்ள மவுனமது உறுதியாமே.
உறுதியுள்ள தீட்சையது பத்தாந்தீட்சை ஓருமனதாய்ச் சசொல்லுகிறோம் நன்றாய்க்கேளு கருதுமன துறுதியினால் "கம் கிலி" யென்று கலங்காமல் மண்டலமே செபித்தாயாகில் பருதிமதி சுடரதுவும் பணியுமைந்தா பரமகயி லாசவெளி தன்னிலேதான் சுருதியுள்ள தீபவொளி சுடரைக்காண்பாய் சுந்ரம்போ லொன்று முதல் பத்தைப்பாரே.
பாரப்பா சிவதீட்சை ஓன்று முதல் பத்து பதிவாக நியிருந்து செபித்தால்மைந்தா ஆரப்பா உனக்கீடு சொல்லப்போரேன் அரகரா ஆதியந்த மருளேவாய்க்கும் நேரப்பா நின்றகயி லாந்தோற்றும் நிஷ்டையிலே மனதொடுங்கி அறிவிற்சேரும் தேரப்பா மனந்தேறிச் சத்திததீட்சை சிவயோக புனிதமதைச் செப்புவேனே.
சிவதீட்சை மந்திரங்கள்
முதல் தீட்சை மந்திரம்:
சிங் சிவ்
இரண்டாவது தீட்சை மந்திரம் :
அங் அம்
முன்றாவது தீட்சை மந்திரம் :
அம் சிங்
நான்காவது தீட்சை மந்திரம் :
சிங் வங்
அம் றீங்
ஆறாவது தீட்சை மந்திரம்:
நங்கிலி
ஏழாவது தீட்சை மந்திரம் :
அய்யும் சிவ்
எட்டாவது தீட்சை மந்திரம் :
உம் சவ்
ரம் லம்
பத்தாவது தீட்சை மந்திரம் :
கம் கிலி
இதில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்கள் அனைத்தும் குருவின் துனையோடு செய்யவேண்டும் தவறான எண்ணாதோடு மந்திரங்களை செபித்தால் சித்தர்களின் கோபாத்திற்க்கு ஆளாகநேரிடும் அதனால் தகுந்த குருவைநாடி தீட்சை பெற்று மந்திரங்களை செபிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக