அகத்தியர் அருளிய சனிபகவான் மந்திரம்

சனிபகவான் மந்திரம் :




தானெனன்ற சனிபகவான் பிடரிமேலே தானேறி நின்றுகொண்டு தலைகால்வேறாய் கோகோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச்சசெய்து நானென்ற ஆணுவமே நிலைக்கபண்ணி நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க்காட்டி கானெனன்ற கபடமதுக் ககேதுவாய்நின்று கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே கவிழ்ந்து நின்ற பாசமதை களையவேண்டி சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் தொழுதுமன துறுதியினால் துகளறுத்து நிருதியெனுஞ் சாபமது நிவர்தத்தியாக நீ மகனே சொல்லுகிறே னன்றாய்க்ககேளு பருதியெனும் ரவிதனையே நமஷ்கரித்து பாங்குடனே "ஓம் கிலி சிவ"வென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் வல்லிடும்பாய் நின்ற சனி மாறிப்பபோகும் மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் கள்ளமனக் ககசகத்திக்கருணைகூர்ந்து கற்பூர தீபவொளி கடாட்சத்தாலே செல்லுமன துறுதியினால் புத்திததோன்ற "சிங்கு சிவா அங்"கென்று திறமாய் நில்லே.
திறமாக மண்டலமே செபித்தாயாகில் 
தீர்க்கமுடன் புத்தியது ததிறமாய்க்காணும் 
வறமான மந்திரங்க ளெல்லாஞ் சீத்தி பறமான மந்திரங்கள் சித்தியானால் பாலகனே அஷ்டசித்துங் கைகக்குள்ளாகும் 
திறமான தீபவொளி மயங்கா தய்யா சிவமான தேகமது மந்திர சித்தாச்சே  - பரீபூரணம் 1200





சனிபகவான் மந்திரம்;
      
                ஓம் கிலிசிவ 

பயிற்சி முறை:

இந்த மந்திரத்தை 48 நாட்கள் காலை மாலை 1008 உரு ஏற்ற வேண்டும். 
வளர்பிறை நாளில் சூரியபகவானை வணங்கி கண்களை மூடி புருவமத்தியில் மனதை குவித்து மந்திரங்களை உருவேற்ற வேண்டும் அப்போதுதான் மந்திரம் சித்தியாகும்.

        மனதை ஓருநிலைப்படுத்த மந்திரம் :

சிங்கு சிவா அங் 


இந்த மந்திரத்தை ஓரு மண்டலம் காலையும் மாலையும் 1008 உரு வீதம் லட்சம் உரு ஜெபிக்க வேண்டும் .
அப்படி ஜெபித்து சித்தி செய்தால் அஷ்ட சித்தியும் அடையாலாம் என்று அகத்தியர் தது பாடலில் குறிப்பிட்டுள்ளார்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts