வாராஹி வசியம்

                 வாராஹி வசியம்




வாராஹி மந்திரம் :

ஓம் ஐம் க்லெளம் ஓம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுஹி வாராஹமுஹி

அந்தே அந்தினிநம;
ருந்தே ருந்தினி நம;
பஞ்ஜே பஞ்ஜினி நம;
ஜம்பே ஜம்பினி நம;
ஸ்தம்பே ஸ்தம்பினி நம;
மோஹே மோஹினி நம;
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸா்வ வாக் சித்த சக்ஷுா் முஹகதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் குரு குரு ஐம் க்லெளம் ட்ட, ட்ட, ட்ட, டட் ஹும்பட் ஸ்வாஹா



வாராஹி திருநாமங்கள்


1.பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி - என்னும் பன்னிரன்டு சக்திமிக்க மந்திர நாமங்களால் அழைக்கப்படுகிறாள் அன்னை வராஹி..


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள்.
எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேற இன்று செய்ய வேண்டிய வராஹி அம்மன் வழிபாடு

பஞ்சமி திதியான இன்று ஸ்ரீவராஹி அம்மனை பூஜித்து வழிபட வேண்டிய நாள். வராஹி அம்மன் உள்ள ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்

சப்தகன்னியரில் ஒருவரான ஸ்ரீவராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். லோகமாதா பராசக்தியின் மறு வடிவம் என்று போற்றுகிறது புராணம். தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட சில ஆலயங்களில் ஸ்ரீவராஹி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது.





இங்கு, பஞ்சமி திதியில் அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீவராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். இதன் பிறகு அன்னைக்கு சர்வ அலங்காரங்கள் செய்து, பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

ஸ்ரீ வராஹி அம்மனுக்கு உகந்த செம்பருத்தி, செவ்வரளி, மல்லி போன்ற மலர்கள் சார்த்தி அன்னையை வழிபாடு செய்யலாம். பெண்கள் நினைத்தது நிறைவேற குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனையை செய்வார்கள். மேலும், சிறப்பாக பூசனிக்காயை சமமாக வெட்டி அதில் நல்லென்ணை போட்டு விளக்கேற்றுவார்கள்.

பஞ்சமி திதி நாளில், ஸ்ரீவராஹி தேவியை வணங்கி வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்கு முதலான காரியங்களில் வெற்றி கிடைக்கும் .

தேனும் தினையும் கலந்தெடுத்து தென்பாங்குத் தமிழில் பாட்டிசைத்து நாம் வணங்கிட மனமகிழ்ந்து மங்கள வரங்களை அள்ளித்தரும்.

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.

இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts