சகல தெய்வங்களின் காய்த்ரி மந்திரம்

 

சகல தெய்வங்களின் காய்த்ரி மந்திரம்





1. பிரணவ மந்திரமாகிய 'ஓம்'


இந்த ஒரே எழுத்தை மட்டுமே மனதில் தியானித்தும் ஜபித்தும் வரலாம். புருவமத்தியிலோ நாசி நுனியிலோ இந்த அட்சரத்தை நிறுத்தி அரை மணி முதல் 1 மணி நேரம் வரை மானசீகமாக ஜபித்து வரவும். இது மந்திரங்களில் மிக உயர்ந்த மந்திரம் மந்திரங்களில் முதலானதும் ஆகும். ஓம் என்பதில் ம் என்ற எழுத்தை நீட்டி ம்ம்ம் என்று அழுத்தமாய் நீட்டி உச்சரிக்கவேண்டும். மானசீகமாக இப்படி தியானம் செய்யவேண்டும். பார்வை மட்டும் புருவமத்தி அல்லது நாசி நுனியில் இருந்து மாறக்கூடாது.

2. 'ஓம் கம் கணபதயே நம ஓம்'

இந்த கணபதி மந்திரத்தை தினசரி 5000 உரு ஜபம் 25 நாள் செய்து வந்தால் சகல விதமான தடங்கல்களும் நிவர்த்தி ஆகும். விநாயகர் படத்தில் முன் இருந்து தூபதீப நைவேத்யம் செய்யவும். வெற்றிலை, பாக்கு, பழம், நைவேத்யத்துடன் தினசரி 5000 ஜபம் செய்துவந்தால் சகலவிதமான தோஷங் களும் நீங்கி செல்வம் விருத்தியடையும்.

3.ஓம் அய்ம் (ஐம்) சரஸ்வதியே நம: ஓம்

இது சரஸ்வதி மந்திரம். இதை தினசரி 1000 உருவீதம் 500000 உரு ஜபித்தால் கல்வியில் வெற்றி, வாக்கு சித்தி, சகல விதமான பாண்டித்யம் போன்றவை ஏற்படும்.

4. ஓம் ஹ்ரீம் காளிகாயை நம: ஓம்

இது காளி மந்திரம். இது மனோதைரியத்தையும் காரியங்களில் வெற்றியையும் கொடுக்கும்.
5. ஓம் ஐம் ஹ்ரீம் சாமுண்டாய விச்சயே ஓம்

இது துர்க்கா மந்திரம் (சண்டிசப்த சதி )

6. ஓம் தும் துர்க்காய நம: ஓம்

இதுவும் துர்க்கா மந்திரம். இது கஷ்டங்களை நீக்கி சகல பாக்யத்தையும் கொடுக்கும். தினசரி இந்த மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்யவும். அல்லது ஒரு நோட்புத்தகத்தில் தினசரி சிவப்பு பேனாவால் 108 தடவை எழுதி வரவும்.

7. ஓம் ஹ்ரீம் நம: ஓம்

இது மாயா பீஜம். இதுவும் மிகவும் சக்தி வாய்ந்தது.

8. ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்ம்யை நம: ஓம்

இது மகாலக்ஷ்மி மந்திரம். தினசரி ஜபம் செய்து வந்தால் செல்வங்கள் பெருகும்.

9. காயத்ரி மந்திரம்

ஓம் பூ: புவ ஸ்வ: தத் ஸவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோந ப்ரசோதயாத்

இது மந்திரங்களுக்கே மாதா. முதல் மந்திரம். இதை எவ்வளவு கூடுதலாக சொல்கிறோமோ அவ்வளவு பலன் கிடைக்கும். ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதற்கு புஷ்பம், சந்தனம், குங்குமம் வைத்து பின் அதன் முன் உட்கார்ந்து ஜபம் செய்யவும்.

10. பல வித காயத்ரி மந்திரங்கள்




1. கணேச காயத்ரி:


சகல தடங்கல்களையும் விலக்க:

ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ

தந்நோ புத்தி ப்ரசோதயாத்:

2. விஷ்ணு காயத்ரி:


குடும்ப நலனுக்காக:

ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்.

3. சிவகாயத்ரி:


சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, செல்வமும் அமைதியும் பெற:

ஓம் பஞ்ச வக்தராய வித்மஹே மகா தேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

4. ப்ரம்ம காயத்ரி:


சகல காரியமும் நலம் பெற:


ஓம் பரமேஸ்வராய வித்மஹே பரதத்வாய தீமஹீ தன்னோ ப்ரம்ம ப்ரசோதயாத்

  5.  ராம காயத்ரி:

பாதுகாப்பும் பெயரும் புகழும் பெற:

ஓம் தசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹீ தன்னோ ராம ப்ரசோதயாத்

6. கிருஷ்ண காயத்ரி:

தொழில், உத்யோக வெற்றி பெற:

ஓம் தேவகீ நந்தனாய வித்மஹே வசுதேவாய தீமஹீ தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்

7. இந்தர் காயத்ரி:

பாதுகாப்புக்கும் எதிரியை வெல்லவும்: ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ஜிராஸ்த்ராய தீமஹீ தந்நோ இந்தர் ப்ரசோதயாத்

8.ஹனுமான் காயத்ரி:

சகல காரிய வெற்றிக்கும் பலரிடத்தும் பரோபகார சிந்தையும் அன்பும் வளர: ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே மஹா பலாயை தீமஹீ தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

9. சூர்ய காயத்ரி:

வியாதிகள் குணமடைய: ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹீ தந்நோ சூர்ய ப்ரசோதயாத்

10. சந்தர் காயத்ரி:

மனக்கவலைகள் நீங்க, மனநோய் வேதனைகள் தீர: ஓம் க்ஷிர்புத்ராய வித்மஹே அமிர்த தத்வாய தீமஹீ தந்நோ சந்த்ர ப்ரசோதயாத்

11. யம காயத்ரி:

யமபயம் நீங்க:

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மகா காலாய தீமஹீ தன்னோ யம ப்ரசோதயாத்

12. வருண காயத்ரி:

ஸ்திரீபுருஷ அன்யோன்யம் அதிகமாக: ஓம் ஜலபிம்பாய வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ வருண ப்ரசோதயாத்

13. நாராயண காயத்ரி:

சகல சக்திகளும் அதிகாரமும் பெற: ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தந்நோ நாராயண ப்ரசோதயாத்

14. நரசிங்க காயத்ரி:

பலருக்கும் உதவி செய்யும் தன்மை அடைய: ஓம் உக்ரசிங்காய வித்மஹே வஜ்ரநகாய தீமஹீ தந்நோ நரசிங்க ப்ரசோதயாத்

15. துர்க்கா காயத்ரி:

சகல காரிய சித்திக்கும், எதிரிகளை வெல்லவும், தடங் கல்களை நீக்கவும், கஷ்டங்களை நீக்கவும். ஓம் கிரிஜாயை வித்மஹே சிவப்ரியாயை தீமஹீ தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்

16. லக்ஷிமி காயத்ரி:

சகல செல்வங்களும் பெருகவும், உத்யோக உயர் வுக்கும், சவுகரியமான வாழ்வுக்கும்: ஓம் மஹாலக்ஷ்ம்யை வித்மஹே விஷ்ணுப்ரியாயை தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்.

17. ராதா காயத்ரி:

பக்தி,அன்பு,இறையருள் பெருக: ஓம் வ்ரஷ்பானு ஜாயை வித்மஹே கிருஷ்ணப் ப்ரியாயை தீமஹீ தந்நோ ராதா ப்ரசோதயாத்

18. சரஸ்வதி காயத்ரி:

ஞாபகசக்தி பெருக, ஞானம் மற்றும் சகல பாஷா பாண்டித்யம் பெற: ஓம் சரஸ்வதியாயை வித்மஹே ப்ரம்மபுத்ரியே தீமஹீ தந்நோ சரஸ்வதீ ப்ரசோதயாத்

19. அக்னி காயத்ரி:

தேகபுஷ்டி, சக்தி, தேஜஸ் மற்றும் சரீரபலம் பெற: ஓம் மஹாஜ்வாலாயை விதமஹே அக்னிதேவாய தீமஹீ தந்நோ அக்னி ப்ரசோதயாத்

20. காம காயத்ரி:

காமஜயம், மற்றும் விந்து பலம் பெற:

ஓம் காம தேவாய வித்மஹே புஷ்ப பாணாய தீமஹீ தன்னோ காம ப்ரசோதயாத்

21. ஹம்ச காயத்ரி:

விவேகம், புத்தி, அறிவு வளர:

ஓம் பரமஹம் சாய வித்மஹே மஹா ஹம்ஸாய தீமஹீ தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்

22. ஹயக்ரீவ காயத்ரி:

பயம் நிவர்த்தியடைய, தைர்யம் பெற:

ஓம் வாணீஷ்வராய வித்மஹே ஹயக்ரீ வாய தீமஹீ தந்நோ ஹயக்ரீவ ப்ரசோதயாத்

23. கருட காயத்ரி:

சகல விஷங்களும் இறங்க;

ஓம் தத் புருஷாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத்

24. ஷியாமா காயத்ரி

ஓம் சுகப்ரியாயை வித்மஹே காமேஸ்வரீ தீமஹீ தன்ன ஷ்யாமா ப்ரசோதயாத்

25. ஜேஷ்டா லக்ஷ்மி காயத்ரி:

தனதான்ய விருத்திக்கு:

ஓம் ரக்தஜ்யேஷ்டாயை வித்மஹே நீலஜ்யேஷ்டாயை தீமஹீ தன்னோலக்ஷ்மீ ப்ரசோதயாத்

26. லக்ஷ்மி காயத்ரி:

செல்வம் பெருக:

ஓம் மஹா லக்ஷ்ம்யை ச்ச வித்மஹே மஹா ஸ்ரீயைச்ச தீமஹீ தந்நோ ஸ்ரீப்ரசோதயாத்

27. காளி காயத்ரி:

தைரியம் அதிகமாக, பயம் நீங்க, சகல தோஷங்களும் விலக:

ஓம் காளிகாயை விதமஹே ஸ்மசான வாசின்யை தீமஹீ தந்நோ கேராப்ரசோதயாத்

28. திரிபுரா காயத்ரி:

சகலகாரிய சித்திக்கும் குடும்ப சௌக்யத்துக்கும்: ஓம் ஐம் திரிபுரா தேவ்யை வித்மஹே காமேஸ்வரீ தீமஹீ சௌம்: தந்ந கிலின்னே ப்ரசோதயாத்

29. சின்னமஸ்தா காயத்ரி

ஓம் விரோச்சன்யை வித்மஹே சின்னமஸ்தாயை தீமஹீ தந்நோ தேவிப்ரசோதயாத்

30. சிவகாயத்ரி:

ஞானம் பெற:

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹீ தந்நோ ருத்ரப்ரசோதயாத்

31. சுப்ரமண்ய காயத்ரி:

சகல காரிய வெற்றி, தைரியம், பயம் நீங்க: ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹீ தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்

32. சூரிய காயத்ரி:

நவக்கிரகத்தில் சூரியன் நன்மையைச் செய்வார்: ஓம் அச்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹீ தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

33. சந்திர காயத்ரி:

ஜாதகத்தில் சந்திரன் நன்மையை செய்ய இதை ஜபிக்கவும் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹீ தன்னோ ஸோம ப்ரசோதயாத்

34.அங்காரக காயத்ரி:

அங்காரகள் ஜாதகத்தில் நன்மையை செய்ய இதை தியானிக்கவும்.

வீரத்வஜாய வித்மஹே விக்ந ஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம ப்ரசோதயாத்

35. புதகாயத்ரி:

கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத்

36. குரு காயத்ரி:

விருஷபத்வஜாய வித்மஹே க்ருணீஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு ப்ரசோதயாத்

37. சுக்ர காயத்ரி:

அச்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத்

38. சனி காயத்ரி:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய

தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத்

39. ராகு காயத்ரி:

நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு ப்ரசோதயாத்

40. கேது காயத்ரி:

அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹீ தன்ன: கேது: ப்ரசோதயாத்


நவக்கிரகங்கள் ஜாதகத்தில் திசை புத்திகளில் கோசாரத் தில் கெடுதலான இடங்களிலோ நீச பாபகிரகங்களோடு சம்பந்தப்பட்டோ இருந்தால் இந்த மந்திரங்களை ஜெபித்தால் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts