திங்கட்கிழமை (21-07-2025) ராசி பலன்கள்
*திங்கட்கிழமை (21-07-2025) ராசி பலன்கள்*
மேஷம்
ஜூலை 21, 2025
கணவன், மனைவிக்கு இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். சில அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். திடம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அஸ்வினி : வேறுபாடுகள் மறையும்.
பரணி : நுட்பங்களை அறிவீர்கள்.
கிருத்திகை : அத்தியாயம் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 21, 2025
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகள் மூலம் செயல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 21, 2025
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வியாபார பாக்கியங்களை பொறுமையுடன் வசூலிக்கவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருந்த சில சிக்கல்கள் நீங்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : சிக்கல்கள் நீங்கும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 21, 2025
தொண்டு நிறுவன பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகள் மூலம் நினைத்த செயல்களை முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தனைகளின் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூசம் : குழப்பங்கள் குறையும்.
ஆயில்யம் : தெளிவு உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 21, 2025
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முத்திரை தொடர்பான துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : ஆதாயகரமான நாள்.
உத்திரம் : சாதகமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜூலை 21, 2025
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மேன்மை உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவங்கள் உருவாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். தடை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
அஸ்தம் : மேன்மையான நாள்.
சித்திரை : மாற்றமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜூலை 21, 2025
பணி நிமித்தமாக எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரரீதியான மாற்றத்தில் பொறுமை காக்கவும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். நினைத்த சில பணிகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து செயல்படவும் . விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : தாமதம் உண்டாகும்.
விசாகம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 21, 2025
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சுப காரியம் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வேலையாட்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஆதரவால் திட்டமிட்ட காரியங்கள் நிறைவு பெறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வாழ்வு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
விசாகம் : ஆதரவு ஏற்படும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 21, 2025
வியாபாரத்தில் மதிப்புகள் உயரும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சூழல்கள் மாறும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 21, 2025
வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களிடம் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 21, 2025
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குழந்தைகள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். பழைய கடன்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை வியாபாரத்தில் நாட்டம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அவிட்டம் : விரயங்கள் ஏற்படும்.
சதயம் : ஆதாயம் ஏற்படும்.
பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 21, 2025
பேச்சுத் திறமையில் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். வீடு வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்புகள் உயரும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : மதிப்புகள் உயரும்.
------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக