மூலிகை சாப நிவர்த்தி

                   மூலிகை  சாப நிவர்த்தி 

                 



குரு ஸ்தோத்திரம்:

குரு பிரஹ்மா குருவிஷ்ணு குருதேவ மஹேஸ்வர குருஸாஷாத் பரம்பிரஹ்ம தஸ்மைஸ்ரீ குருவேநம

கணபதி மூலமந்திரம்:


ஓம் க்ரீம் க்லைம் ஸ்ரீம் கங் கணபதி த்ரிலோக்யம் வஸமாயை ஸ்வாஹா


இந்த மூல மந்திரத்தை மூலிகை சாப நிவர்த்தி செய்யும் போது ஜெபம் செய்ய வேண்டும்.

மூலிகை சாப நிவர்த்தி:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸௌம் சிவயநம ப்ரஹ்ம நாரத தேவமுனி கணசாபம் நாஸாய நாஸ ஸ்வாஹா    (உரு 108)


மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அதன் முன் வாழை சூடம் இவைகளை வைத்து தீப தூபம் காட்டி வணங்கி கிழக்கு முகமாய் அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை  108 உரு ஜெபம் செய்து கட்டினவுடன் ஓரு எழுமிச்சம் பழம் அறுத்து அதை மூன்று சுற்றி சுற்றி வீசி எறிந்து விட்டு வேர் எடுக்க வேண்டும் வேர் எடுக்கும் போது ஆணிவேர் அறாமல் வேர் எடுக்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை தான் மூலிகை எடுக்க உரிய நாள் இவ்வவிதம் காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து எடுத்தால்தான் மூலிகை  பலன் தரும்  விநாயகர் பூஜை செய்துதான் மூலிகை யை எடுக்க வேண்டும்.


மூலிகைகளூக்கு மை:

எந்த மூலிகையாக இருந்தாலும் குறித்த காலத்தில் அதனருகிற் சென்று கன்னி நூல் காப்பு கட்டி தூபதீபங் கொடுத்து.

ஓம் சக்தி சாபம் நசிநசி
சகல சாபம் நசிநசி
சசித்தர் சாபம் நசிநசி
மூலிகை சாபம் நசிநசி
சகல தேவர்கள் சாபம் நசிநசி
ஓம் காளி ஓம் பிடாரி ஓம் நசி மசி வய சுவாகா

என்று ஓன்பது தரம் உரு ஜெபித்து ஓன்பதாவது தடவை சுண்டு விரல்களிரண்டும் நகங்கள் பத்தும் அதன் பேரில் படாமல் இலையைக் கிள்ளுகிறதோ செடியைப் பிடுங்குகிறதோ எப்படி செய்து கொண்டாலும் வியர்த்தமாகாது சித்தியாகும் 



மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தல்:

மூலிகைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமாகில் வேண்டிய மூலிகையிடம் சென்று அதனிடம் சுத்தம் செய்து அதன் பிறகு காப்பு  கட்டி பொங்கலிட்டு தேங்காயுடைத்து தூப தீபங் கொடுத்து

ஓம்  மூலி சர்வ மூலி உன்னுடைய உயிர் உன்னுடலில் நிற்க சுவாஹா

என்று முப்பத்திரண்டு தடவை ஜெபித்து பிடுங்க வேண்டும். அவ்வாறு மூலிகைகளுக்கு உயிர் கொடாவிடில் அந்த மூலிகைகள் உபயோப்படாது 


Ads

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts